யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு...! விஜயின் த.வெ.க கோடி...!
case seeking ban use elephant symbol postponed Vijay TVK crore
அரசியல்வாதி விஜயின், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியில் இரட்டை யானை இடம் பெற்றுள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியான மாயாவதியின் 'பகுஜன் சமாஜ் கட்சி' யானை சின்னத்தை பயன்படுத்தி வருகிறது.

இதனால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர், விஜய் கட்சியின் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடைவிதிக்கக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தப்போது, அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை யாரும் பயன்படுத்த முடியாது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.மேலும் இந்த வழக்கு பெரும் சர்ச்சையாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
English Summary
case seeking ban use elephant symbol postponed Vijay TVK crore