தமிழக பள்ளி, கல்லூரிகளில் அதிரடி மாற்றம் - முதலமைச்சரின் கையில் முக்கிய 2 செயல்திட்டங்கள்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே ஏற்படும் சாதி வன்முறைகளை தடுப்பதற்கு பரிந்துரைகள் வழங்க தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு குழு, அதன் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்து உள்ளது.

அதன்படி, உடனடியாக செய்ய வேண்டியவை, நீண்டகால செயல்திட்டங்கள் என 2 விதமாக பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி ரீதியான மோதல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் தங்களது கைகளில், தங்களது ஜாதியை அடையாளப்படுத்தும் விதமாக கயிர்களை கட்டுவதால், இந்த மோதல் ஏற்படுவதாக சமூக ஆர்வளர்களும், ஆசிரியர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனையடுத்து, இந்த கல்வியாண்டு முதல் மாணவர்கள் கையில் கயிறு கட்டுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் இடையே ஏற்படும் சாதிய வன்முறைகளை  தடுப்பதற்கு, தமிழக அரசால் ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 

இந்த குழு தமிழக முழுவதும் ஆய்வு செய்து இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்த அறிக்கையின்படி பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்படும் சாதிய வன்முறைகளை தடுப்பதற்கு உடனடியாக செய்ய வேண்டியவை மற்றும் நீண்ட கால செயல்திட்டங்கள் என்று இரண்டு விதமான பரிந்துரையை இந்த குழு வழங்கியுள்ளது.

இந்தக் குழுவின் பரிந்துரையை ஏற்று விரைவில் தமிழக அரசு சார்பில் பல உத்தரவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Caste Violence TN Schools 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->