இதற்கு மேல் முடியாது! வயிற்றில் அடித்த கர்நாடகா! வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!
Cauvery management recommend releasing 3000 cfs water to TamilNadu
கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு அக்டோபர் மாதத்தின் பங்காக 22.22 டிஎம்சி நீர் திறக்க வேண்டும். அந்த நீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என இன்று டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுவானது காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் ஏற்கனவே தமிழகத்திற்கு நாள்தோறும் விநாடிக்கு 5000 கன அடி நீர் வீதம் திறக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது அந்த நீரானது 3000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இங்கு நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அணைகளுக்கான நீர் வரத்து பாதியாக குறைந்துள்ளதால் கர்நாடகாவில் 161 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் காவிரி டெல்டா பகுதியில் மட்டும் 31 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கட்டாயம் நீர் திறக்க முடியாது என கர்நாடக சார்பில் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டது.
அதனை ஏற்றுக் கொண்ட காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவானது தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழை மற்றும் காவிரி நீர் வரத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு நாள்தோறும் கர்நாடக அணையில் இருந்து 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக இரு மாநில விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கான நீதி திறப்பு குறைக்கப்பட்டுள்ளது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Cauvery management recommend releasing 3000 cfs water to TamilNadu