கர்நாடகா அரசுக்குக் கண்டனம் தெரிவித்து அதிரடி தீர்மானம்: சட்டபூர்வ நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


காவிரி விவகாரம் தொடர்பாக சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், பாமக சார்பில் ஜி.கே.மணி, சதாசிவம், விசிக சார்பில் திருமாவளவன், எஸ்.எஸ்.பாலாஜி, காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, மமக சார்பில் ஜவாஹிருல்லா, தவாக சார்பில் வேல்முருகன், கொமதேக சார்பில் ஈஸ்வரன், பாஜக சார்பில் கரு.நாகராஜன், முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், இந்த கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்ட நிபுணர்கள் கூட்டத்தில் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். 

இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை பெற உச்ச நீதிமன்றத்தை நாடவும், கர்நாடகா அரசுக்குக் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

பின்னர் காவிரி பிரச்னை தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், "காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது. கர்நாடகாவின் நடவடிக்கையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரை உடனடியாக வழங்க வேண்டும். தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கும் சூழலில் காவிரி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகாவிற்கு கண்டனம்.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CauveryIssue TN All Party Meeting CM Stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->