குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு.. சிபிசிஐடி எடுத்த அதிரடி முடிவு.. சூடு பிடிக்கும் வேங்கைவயல் விவகாரம்..!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அன்னவாசல் ஒன்றியத்தில் வேங்கைவயல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மலம் கலந்ததாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெரியவந்தது. 

இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்தவர்களை கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வெள்ளலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கிய சிபிசிஐடி போலீசார் வேங்கைவயல் கிராமம், காவிரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராம மக்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நடைபெற்று 45 நாட்கள் முடிவடைந்த நிலையில் 112 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் தற்பொழுது வரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. சி.பி.சி.ஐ.டி விசாரணையின் பொழுது பலர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிப்பதால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிபிசிஐடி போலீஸார் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணை நடத்தப்பட்டவர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையிலும், அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையிலும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கூறிய விரைவில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் அனுமதி பெற்று அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் விசாரணை அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBCID decides to conduct fact-finding probe in Vengaivyal issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->