ரூட்டை மாற்றிய சிபிசிஐடி! நெல்லை ஜெயக்குமார் வழக்கு! முக்கிய புள்ளிகளிடம் 2 மணி நேரம் விசாரணை! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 2 மணி நேரமாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர் கே.பி.கே ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4ஆம்  தேதி உடல் எரிக்கப்பட்டு மர்மமான முறையில் தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயக்குமார் மரணத்தில் மர்ம  நீடித்து வந்த நிலையில் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கு மேலாக பல்வேறு கோணங்களில் சிபிசிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை பெரிதாக துப்பும் துளங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் மாநில மனித உரிமைகள் துறை நிர்வாகி விவேக் முருகன் மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மருதூர் மணிமாறன் ஆகியோரை சிபிசிஐடி அதிகாரிகள் பாளை என்.ஜி.ஓ காலனியில் உள்ள அலுவலகத்தில் வைத்து 2 பேரிடமும் 4 அதிகாரிகள் கொண்ட குழு 2 மணி நேரத்துக்கும் மேலாக தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர்.

ஜெயக்குமாருக்கு ஏதேனும் பெண்களுடன் தொடர்பு இருக்கிறதா? அவருடன் யாரேனும் அடிக்கடி உடன் வருவார்களா? அரசியல் பிரமுகர்களுடன் ஜெயக்குமாருக்கு எந்த வகையில் பழக்கம் இருந்தது என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு இருவரும் கூறிய தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBCID officials interrogated Congress officials for 2 hours regarding Jayakumar mysterious death case


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->