முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை.!
CBCID police raid in ex minister vijayabaskar house
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அதிமுக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தேடப்பட்டு வரும் சூழலில், அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் இடங்களில் எற்கனவே சோதனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமியிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே விஜயபாஸ்கர் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை நேற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். விஜயபாஸ்கரின் வீடு, நிறுவனங்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 2 டி.எஸ்.பிக்கள், ஒன்பது ஆய்வாளர்களை கொண்ட குழு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது.
English Summary
CBCID police raid in ex minister vijayabaskar house