கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி விவகாரம் : வெளியான வீடியோ - சிபிசிஐடி போலீசார் கடும் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம், 13-ந் தேதி மர்மமாக இறந்தார். 

ஸ்ரீமதியின் மரணத்தில் இருப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு (CBCID) போலீசார் விசாரித்து வருகின்றனர். 

இதற்கிடையே, மாணவி ஸ்ரீமதி எழுதியதாக கூறப்படும் கடிதம், ஸ்ரீமதி வகுப்பறை மற்றும் பள்ளியின் மாடிக்கு செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் ஒவ்வொன்றாக கசிந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் ஸ்ரீமதி தொடர்பாக மீண்டும் ஒரு சிசிடிவி காட்சி வெளியானது.

அந்த காணொளியில், மாணவியை 3 பெண்கள், ஒரு ஆண் உட்பட 4 பேர் தூக்கிச் செல்வது பதிவாகி உள்ளது. மேலும், ஜூலை, 13-ந் தேதி காலை 5.24 மணிக்கு இந்த காட்சி பதிவாகியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக யாரேனும் புலன் விசாரணை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிசிஐடி போலீசார் எச்சரித்துள்ளனர்.

மேலும், சிபிசிஐடி புலன் விசாரணையை பாதிக்கும் வகையில் காணொலி காட்சிகளை பதிவிட கூடாது என்றும், மீறினால் சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்படும் எனவும் சிபிசிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBCID police warn for kallakurichi school girl death case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->