#BREAKING:: சிபிஐ வளையத்தில் பழ.நெடுமாறன்.. பிரபாகரன் குறித்து விசாரிக்க முடிவு..!! - Seithipunal
Seithipunal


உலகத் தமிழர்கள் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொழுது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரோடு இருப்பதாகவும் அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அறிவித்து இருந்தார்.

இலங்கை தமிழீழ விடுதலை போரின் பொழுது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து அவருடைய மகனும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதன் பிறகு பிரபாகரனின் குடும்பம் என்ன ஆனது என்பது மர்மமாகவே இருந்து வந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பிரபாகரனுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் எனவும் மீண்டும் தமிழீழம் பற்றி விரிவான திட்டத்தை அறிவிக்க இருப்பதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பழ.நெடுமாறனை சிபிஐ விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரிடம் பிரபாகரன் குடும்பத்தினரை எங்கு சந்தித்தார்..? எப்பொழுது சந்தித்தார்..? பிரபாகரன் எங்கு தங்கி இருக்கிறார்..? அவருடைய குடும்பம் எங்கே இருக்கிறது..? பிரபாகரன் மகள் எங்கு உள்ளார்..? போன்ற விவரங்கள் குறித்து விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI decides to investigate LTTE Prabhakaran in Pazha Nedumara


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->