வடிவேல் பாணியில், செல்போன் டவரை காணும் - மர்ம கும்பலை சுத்துப்போட்ட போலீஸ்.! - Seithipunal
Seithipunal


சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட செல்போன் டவரை மர்ம கும்பல் ஒன்று ராட்சத கிரேன் எந்திரங்களைக் கொண்டு கழற்றி கடத்திச் சென்றுள்ளது. 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கப்பட்டது. இந்த செல்போன் டவரை பாதுகாப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த ஒருவரை நியமித்து இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அங்கு ஒரு கும்பல் வந்து, இந்த செல்போன் டவர் செயல்பாடற்று உள்ளது. எனவே இதை கழற்றி வேறு இடத்தில் நட உள்ளோம் என்று பாதுகாவலரிடம் கூறி, ராட்சத கிரேன் எந்திரங்களைக் கொண்டு செல்போன் டவர் முழுவதையும் கழற்றி கடத்திச் சென்று விட்டது. 

இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் செல்போன் டவரில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக வந்தனர். அப்போது அங்கு செல்போன் டவர் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதன் பின்னர், இது குறித்து நிறுவனத்தின் மேலாளர் தமிழரசன் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், ஒரு குறிப்பிட்ட தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு செல்போன் டவர்களை மர்ம கும்பல் குறி வைத்து திருடியுள்ளது தெரியவந்துள்ளது. திருடப்பட்ட இந்த செல்போன் டவரின் மதிப்பு ரூ. 25 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து, காவல்துறையினர் அந்த மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cellphone tower missing case vazhappadi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->