சென்னை வந்த மத்திய குழு - உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. 

இந்த வெள்ள பாதிப்பை சரி செய்வதற்காக தமிழகம் முழுவதிலிருந்தும் தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பனி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பாதிப்புகளை பார்வையிட 6 உயர் அதிகாரிகள் அடங்கிய மத்திய குழு டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ளது. 

அவர்கள் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு இன்று காலையில் தலைமைச் செயலகத்திற்கு வந்து, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் அதிகாரிகளுடன் புயல் பாதிப்புகள் குறித்து விரிவாக விவாதிக்க உள்ளனர்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் மத்திய குழுவினர் இரண்டாக பிரிந்து இன்றும், நாளையும் வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிடுகின்றனர். பின்னர் கள ஆய்வை முடித்துவிட்டு 14-ந் தேதி காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central committee consultation with higher officers in chennai secretariat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->