திமுகவுக்கு கிடைத்த வெற்றி..!! "கடலில் போனா சின்னம்".. மத்திய அரசு இறுதி ஒப்புதலும் வழங்கியது..!!
Central govt gives final approval for Karunanidhi pen symbol in ocean
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி உயிரிழந்தார். அவரின் நினைவாக சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் தமிழக அரசு சார்பில் நினைவிடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்தில் பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னமும் அமைக்க திட்டமிட்டது. அதற்காக மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்பட பல்வேறு துறைகளில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது.
இதற்கு மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து தமிழக அரசு பொதுமக்களிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் மத்திய அரசு பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி வழங்கியது. பொதுமக்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் மத்திய அரசு பேனா நினைவு அமைக்க அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மெரினாவின் கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழக அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் அனுமதி வழங்கியது. கருணாநிதி பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தேவையான அனைத்து அனுமதிகளும் கிடைத்திருப்பதால் விரைவில் பணிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் திமுகவைச் சேர்ந்த உடன்பிறப்புகள் குஷியில் உள்ளனர்.
English Summary
Central govt gives final approval for Karunanidhi pen symbol in ocean