#BREAKING:: தீயாய் பரவும் கொரோனா.."தமிழ்நாட்டில் சராசரியை விட அதிகம்".. மத்திய அரசு எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்..!!

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கணிசமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே நோய் பரவல் அதிகமாக உள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் "தமிழகத்தில் வாராந்திர கொரோனா தொற்று என்பது இந்தியாவின் வாராந்திர தொற்றை விட அதிகமாக உள்ளது. தேசிய சராசரி 5.5 சதவீதமாக இருந்து வரும் நிலையில் தமிழகத்தின் பாதிப்பு 6 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, சென்னை, கோவை, தூத்துக்குடி, விழுப்புரம், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் நோய் பாதிப்பு விகிதம் என்பது 10% ஆக இருந்து வருகிறது.

இதன் காரணமாக நோய் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவலை கண்காணிப்பது, காய்ச்சல் குறித்தான விவரங்களை சேகரிப்பது, மாவட்டம் தோறும் கொரோனா பரிசோதனையை அதிகரிப்பது, மரபணு பகுப்பாய்விற்கு அனுப்பப்படுகின்ற கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள மாதிரிகளில் எண்ணிக்கையை அதிகரிப்பது, பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்துவதை அதிகரிப்பது, சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா நோய் என்பது இன்னும் முடிவுக்கு வரவில்லை. இத்தக சூழ்நிலையில் நாம் எந்தவித கவன குறைவுக்கும் இடமளிக்கக் கூடாது. எங்கெல்லாம் கவலைக்குரிய இடங்களாக இருக்கிறதோ, அங்கெல்லாம் நோய் பரவல் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது" என மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூசன் தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இருவர் உயிரிழந்துள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt warn spread of corona in TN higher than average


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->