மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகை.. காரணம் என்ன.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள நடை பயணத்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் ஊழலுக்கு எதிராகவும், அனைத்து மக்களுக்கும் நலத்திட்டங்கள் சென்றிடைவதை உறுதி செய்யும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பாதயாத்திரியை நாளை ராமேஸ்வரத்தில் தொடங்குகிறார்.

இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி ராமேஸ்வரம் சரக்கு டிஐஜி துறை தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 12 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 30 டிஎஸ்பிக்கள், 60 ஆய்வாளர்கள் என 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central minister Amithsha comes to TN tomorrow


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->