கள்ளச்சாராயம் விவகாரத்தில் திமுகவிற்கு தொடர்பு - சிபிஐ விசாரணை! மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் 56 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விஷ சாராயம் விற்றவர்களுடன் ஆளும் திமுக கட்சிக்கு தொடர்பு இருப்பதால், சிபிசிஐடி விசாரணை நடத்தினால் முறையாக இருக்காது. 

எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மேலும் கள்ளச்சாராயம் விவகாரத்தில் பலியான 56 பேரில் அதிக பேர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள்.

இப்படி இருக்க இது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, கார்கே வாய் திறக்காதது ஏன்? என்றும் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி உள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் ஊரில் கடந்த ஜூன் 18ம் தேதி கள்ளச் சாராயம் அருந்தியதில் பலர் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகினர். 

ஜூன் 19 ம் தேதி காலை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பலர் அனுமதிக்கப் பட்டனர். அன்று முதல் இன்று ஜூன் 23ம் தேதி வரை 57 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். 

மேலும் 159 பேர் வரை சேலம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் பலரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Minister Say Nirmala Kallasarayam case Behind DMK CBI


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->