தீபாவளியையொட்டி ஊழியர்களுக்கு கார், பைக் பரிசளித்த நகைக்கடை உரிமையாளர்.!
Challani jewellery owner car and bike gift to employees
சென்னை சேர்ந்த தொழிலதிபர் ஜெயந்திலால் இவர் சல்லானி ஜுவல்லரி என்னும் பெயரில் நகைக் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்த பண்டிகைகளை தொடர்ந்து வியாபாரம் சிறப்பாக நடந்துள்ளது.
இந்த நிலையில் அவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவருக்கும் கார் மற்றும் மோட்டார் பைக் பரிசாக வழங்கியுள்ளார்.

அந்த வகையில் தனது நகை கடையில் வேலை செய்த 8 பேருக்கு காரும், 18 பேருக்கு மோட்டார் பைக்கும் பரிசாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், 'எனது ஊழியர்களை ஊக்குவிக்கும் அடிப்படையிலும், அவர்களின் பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த பரிசை வழங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும் குறுகிய நாட்களில் கூடுதலாக உழைத்த ஊழியர்களால் லாபம் கிடைத்ததாகவும் என்னுடைய ஏற்ற, இறக்கங்களிலும் உடன் பயனித்தற்காக நான் செய்யும் சிறு நன்றி கடன்' என தெரிவித்துள்ளார்.
English Summary
Challani jewellery owner car and bike gift to employees