சாம்பியன்ஸ் டிராபி: புதிய வரலாறு படைத்த இங்கிலாந்தின் பென் டக்கெட்! 5வது இடத்திற்கு தள்ளப்பட்ட சச்சின்!
Champions Trophy 2025 ENG ben Duckett new record
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் தனிப்பட்ட வீரராக அதிக ரன்கள் குவித்த சாதனையை இங்கிலாந்தின் பென் டக்கெட் படைத்துள்ளார்.
இன்றைய ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி முதலில் விளையாடியது. 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் சேர்த்தது.
இது சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு அணிக்கான மிக அதிகபட்ச ஸ்கோராகும். அதேபோல் பென் டக்கெட் தனது அதிரடியான ஆட்டத்தால் புதிய வரலாறு எழுதியுள்ளார்.
அவர் 143 பந்துகளில் 165 ரன்கள் குவித்தார், இதில் 17 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். இதுவரை சாம்பியன்ஸ் டிராபி தனிநபர் சாதனையில் நியூசிலாந்தின் நாதன் ஆஸ்டிலே 145* ரன்கள் (2004) அடித்து முன்னணியில் இருந்தார். இன்று டக்கெட் அந்த சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்து புதிய வரலாற்றை எழுதியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் டாப் 3 அதிகபட்ச ஸ்கோர்கள்:
பென் டக்கெட் – 165 ரன்கள் (2025, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக)
நாதன் ஆஸ்டிலே – 145* ரன்கள் (2004, அமெரிக்காவுக்கு எதிராக)
ஆண்டி ஃபிளவர் – 145 ரன்கள் (2002, இந்தியாவுக்கு எதிராக)
தனிநபர் அதிகபட்ச ரன்கள் பட்டியலில் இந்தியாவின் சௌரவ் கங்குலி (141*, 2000) மற்றும் சச்சின் டெண்டுல்கர் (141, 1998) ஆகியோர் முறையே 4 மற்றும் 5 ஆம் இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Champions Trophy 2025 ENG ben Duckett new record