சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் - சென்னை மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
Champions Trophy India vs Pakistan match Chennai
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம், நாளை (பிப்ரவரி 23) துபாயில் நடைபெற உள்ளது.
இந்திய, பாகிஸ்தான் ரசிகர்களை தாண்டி உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் இந்த போட்டிக்கான வரவேற்பு தமிழ்நாட்டிலும் எகிறியுள்ளது.
இந்த நிலையில், சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் மக்கள் நேரடியாக இந்த ஆட்டத்தை பார்க்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தனது எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில், "பொதுமக்கள், குடும்பத்தினருடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உற்சாகத்தை பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய திரைகள் அமைக்கப்பட்டு, போட்டி நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இந்திய அணி, முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தானை ஏற்றுக்கொள்ள உள்ளது.
அதே சமயத்தில் தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி கண்ட பாகிஸ்தான், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நெடுக்கடியுடன் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Champions Trophy India vs Pakistan match Chennai