அருமைங்கடா! இன்றும் நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு! இந்த 4 மாவட்டக்கார மக்களே உஷார்!
Chance of very heavy rain today and tomorrow in Chennai Kanchi Senkai and Tiruvallur
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாமல், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை (நவம்பர் 30) காலை கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை மற்றும் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான், சமூக வலைதளத்தில் வெளியிட்ட தகவலின் படி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்றும் (நவம்பர் 29), நாளையும் (நவம்பர் 30) மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யக் கூடும்.
அவர் கூறிய முக்கிய தகவல்கள்:
- தற்போது காற்றின் வேகம் 30 நாட்ஸ் அளவை நெருங்கியுள்ளது.
- இது 35 நாட்ஸ் ஆக அதிகரித்தால் புயலாக அறிவிக்கப்படும், ஆனால் அது நடைபெற வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
- மழைச்சுழற்சி தீவிரமடைந்து வரும் நிலையில், மழையின் அளவு முக்கிய கவனத்திற்கு வேண்டியதாக உள்ளது.
- மேகக் குவியல்கள் புதிதாக உருவாகி வரும் நிலையில், மதியம், மாலை, இரவு என மழையின் தீவிரம் அதிகரிக்கும்.
- குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று (29) மற்றும் நாளை (30) அதிக கனமழை மற்றும் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை:
- மேகச்சுழற்சியின் தீவிரத்தால் கடலோர பகுதிகளில் இருந்து தொலைவாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
- சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில், குறிப்பாக மழையால் பாதிக்கப்படும் இடங்களில் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த நிலைமையில், நவம்பர் 30-ம் தேதியுடன் மழையின் தீவிரம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறதாலும், வானிலை மாற்றங்களை தொடர்ந்து அவதானிக்க வேண்டியது மிக அவசியம்.
English Summary
Chance of very heavy rain today and tomorrow in Chennai Kanchi Senkai and Tiruvallur