காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாததற்கு காரணம் என்ன? - வானிலை மையம் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரை வலுப்பெற்று, நேற்று முன்தினம் புயலாக உருவாகிவிடும் என்று கருதப்பட்டது. ஆனால் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடி, நேற்று முன்தினம் புயல் உருவாகவில்லை.

இதேபோல், மழை முன்னறிவிப்புகளிலும் மாற்றம் இருந்தது. இந்த நிலையில், புயல் உருவாகாமல் போனதற்கான காரணம் என்ன? எதிர்பார்த்த மழை கிடைக்காமல் போனது எப்படி? என்பது குறித்த கேள்விகளுக்கு வானிலை ஆய்வாளர்களும், ஆய்வு மையமும் விளக்கம் அளித்துள்ளது.

 

அதாவது, "கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் சில பகுதிகள் இலங்கையின் நிலப்பரப்பில் ஊடுருவியதால், டெல்டா பகுதிகளில் கொட்ட வேண்டிய மழை, வட இலங்கை பகுதிகளில் பெய்துள்ளது. 

அரேபிய உயர் அழுத்தம், பசிபிக் உயர் அழுத்தம் மற்றும் மேற்கத்திய தாழ்வு நிலை உள்ளிட்ட காரணிகளால் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புயலாக உருவாகுவதில் தாமதத்தை ஏற்படுத்தியது.

மேலும், வளிமண்டலத்தின் வெவ்வேறு அடுக்குகளில், வெவ்வேறு திசைகளில் இருந்து வந்த காற்றினால் ஏற்பட்ட காற்று முறிவு காரணமாக தமிழக கடல் பகுதிகளை நோக்கி தீவிரம் அடையாமல் சற்று வலு இழந்து போனது. 

அப்போது தான் மணிக்கு 13 கி.மீ. வேகம் வரை நகர்ந்து வந்த அந்த அமைப்பு, அப்படியே நகராமல் நின்று போனது. இந்த காரணங்களால்தான் புயல் உருவாகவில்லை. எதிர்பார்த்த மழையும் பெய்யவில்லை" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

metereological center explain why did not storm form


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->