கூர்நோக்கு இல்லங்களுக்கான பரிந்துரைகள் வழங்கினார் நீதிபதி சந்துரு.!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல் ஸ்ரீ என்பவர் உயிரிழந்ததை அடுத்து கூர்நோக்கு இல்லங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தார் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின். 

அதன் அடிப்படையில் தமிழக முழுவதும் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் ஆய்வு மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவினர் இன்று தங்களது ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அத்தோடு கூர்நோக்கு இல்லங்களில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் இப்படித்தான் பரிந்துரைகளையும் அளித்துள்ளனர்.

அதன்படி, கூர்நோக்கு இல்லங்களின் சேர்க்கை கண்காணிப்பாளர் அல்லது உதவி கண்காணிப்பாளர் முன்னிலையில் செய்யப்பட வேண்டும். கூர்நோக்கு இல்லங்களில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு அவர்கள் தங்குவதற்கு போதுமான ஆடைகளை வழங்க வேண்டும்.

சிறிய, தீவிரமான அல்லது கொடூரமான குற்றங்களின் அடிப்படையில் குழுக்களாக பிரிக்கப்பட வேண்டும். கூர்நோக்கு இல்லங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள் வயதின் அடிப்படையில் குழுக்களாக பிரிக்க வேண்டும். குறிப்பாக 13 முதல் 16 வயது வரை ஒரு குழுவாகவும், 16 முதல் 18 வயது வரை மற்றொரு குழுவாகவும் கண்டிப்பாக பிரிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chanduru given recommends for observation home


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->