வனத்தொழில் பழகுநருக்கான தேர்வில் மாற்றம்.. டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு.!
Change in the examination for Forestry Practitioner
அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு வனத்துறையை சேர்ந்த வன தொழில் பழகுநர் பணிக்கான தேர்வு வருகிற டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வனத்தொழில் பழகுனருக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வெளியான நிலையில், டிசம்பர் 4-ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது. அதற்கான, தேர்வு மையங்களாக முதல் கட்டமாக தேர்வாணையம் மூலம் 15 மையங்கள் தேர்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 15 இடங்களில் வன தொழில் பழகுனருக்கான தேர்வு நடைபெற இருந்த நிலையில் தற்போது 7 மையங்களில் மட்டுமே வனத்தொழில் பழகுநர் தேர்வு நடைபெறும் என அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 7 நகரங்களில் மட்டுமே தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
மேலும், கட்டாய தமிழ் மொழி தேர்வு டிசம்பர் 4-ம் தேதி நேரடியாக எழுத்து முறையில் நடைபெறும். அதன் பிறகு பிற பாடங்கள் கணினி வழி தேர்வாக டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
English Summary
Change in the examination for Forestry Practitioner