சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!...280 பயணிகளுடன் இருந்த விமானத்தில் திடீரென வந்த புகை!.... - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லவிருந்த எமிரேட்ஸ் விமானத்தில் திடீரென வந்த புகையால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் யணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மொத்தம் 280 பயணிகளுடன் துபாய் செல்வதற்காக நேற்று இரவு எமிரேட்ர்ஸ் விமானம் புறப்பட இருந்தது.

இந்நிலையில், விமானம் புறப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக விமானத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியதை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து புகையை கட்டுப்படுத்தினர்.

சென்னை விமான நிலையத்திலிருந்து 280 பயணிகளுடன் துபாய் செல்லவிருந்த எமிரேட்ஸ் விமானத்தில் திடீரென வந்த புகை விமான பயணிகளிடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே விமானம் சரியாக பழுது பார்க்காததே இந்த புகைக்கு காரணம் என்றும், விமான நிலைய ஊழியர்களின் அலட்சியம் மற்றும் முறையில்லாத நிர்வாக போக்கின்காரணமாக   இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் விமான பயணிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாடுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chaos at chennai airport sudden smoke came from the plane with 280 passengers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->