#சற்றுமுன்: செங்கல்பட்டு: தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு! மகன் பலி, அதிரவைக்கும் பின்னணி!
chengalpattu Dad Son murder
செங்கல்பட்டு மாவட்டம் கருப்பேரி பகுதியில், தந்தை மற்றும் மகன் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில், மகன் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை நரசிம்மன், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தந்தை மற்றும் மகனை அரிவாளால் தாக்கிய நபர், சம்பவத்திற்குப் பிறகு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால், குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வலைவீச்சு நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன்விரோதமே இந்த கொலையின் காரணமாக இருக்கலாம் என தகவல் வெளிவந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
chengalpattu Dad Son murder