#BigBreaking | கள்ளச்சாராய மரணம் 21 ஆக உயர்வு! திமுக அமைச்சரை சுத்துப்போட்ட சங்கரின் உறவினர்கள், பரபரப்பு!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்திருக்கிறது. 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தையடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 

விஷச்சாராயத்தை அருந்தி செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜம்பு, சங்கர் என்ற மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வந்த அமைச்சர் மா சுப்பிரமணியத்தை தடுத்து நிறுத்தி, உயிரிழந்த சங்கரின் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் அமைச்சர் மா சுப்பிரமணியன் இடம் சங்கரின் உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu kalla sarayam death ingress 7


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->