சென்னையை பதறவைத்த பள்ளி மாணவன்! இந்த வயசுல செய்யுற வேலையா இது?!  - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்களை காவல்துறை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

சென்னை விமான நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என உறுதியானது.

மிரட்டல் வந்த செல்போன் எண்ணை கண்டுபிடித்து போலீசாரை விசாரணையை தொடங்கினர்.

இதில், அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேரை பிடித்தது போலீசார் சிறப்பு விசாரணை செய்ததில் உண்மை வெளிவந்துள்ளது.

இதனையடுத்து இரு மாணவர்களையும் காவல்நிலையம் அழைத்து வந்த போலீசார், மாணவர்கள், பெற்றோரிடம் மன்னிப்பு கடிதங்கள் எழுதி வாங்கி, எச்சரித்து அனுப்பி வைத்தனர். 
 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Airport Bomb Threat Case School Student


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->