ஃபெஞ்சல் புயலின் தாக்கம்: சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் மையம் சென்னை அருகிலிருந்து 140 கி.மீ. தூரத்தில் உள்ளது. மேலும், நாகையிலிருந்து வடகிழக்கே 210 கி.மீ., புதுச்சேரி இருந்து தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

புயல் இன்று மாலை 5 மணி அளவில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும்போது, மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என்றும், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், புயலின் தாக்கத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Airport is temporarily closed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->