போகி பண்டிகைக்கு பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் - சென்னை விமான நிலையம் வேண்டுகோள்! - Seithipunal
Seithipunal


போகி பண்டிகைக்கு பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் என, சென்னை மக்களுக்கு சென்னை விமான நிலையம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வரும் போகிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர், ரப்பர் ட்யூப் மற்றும் நெகிழி (Plastic) ஆகியவற்றை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, தாம்பரம் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், மக்கள் தங்களிடையே உள்ள தேவையில்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து, அவற்றைத் தனியாக மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை வழங்கி புகையில்லா மற்றும் காற்று மாசில்லா போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று, அந்தந்த மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், போகி பண்டிகைக்கு பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் என, சென்னை விமான நிலையம் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை விமான நிலையம் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "புகைமூட்டம் இல்லாத போகியைக் கொண்டாடுங்கள்! காரணம், அடர் மூடுபனியில் கரும்புகை கலந்தால், அந்த காற்றுமாசு விமான நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பார்வை நிலையை வெகுவாகக் குறைத்து, விமான செயல்பாடுகளை பாதிக்கும்" என்று தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Airport Request To People for Bhogi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->