சென்னையின் முக்கிய சாலையில் நாளை முதல் போக்குவரத்திற்கு தடை! - Seithipunal
Seithipunal


மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக நாளை முதல் 'ஆண்டர்சன் சாலை'யில் வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது.

இதுகுறித்து சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக 25.01.2023 புதன் கிழமை முதல் 7 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

மெட்ரோ ரயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக வேண்டி ஆண்டர்சன் சாலை மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது.

பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டிபள் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.

கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஆண்டர்சன் சாலை வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து வலது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, டேங்க் பண்ட் சாலை, சந்திரயோகி சமாதி தெரு மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

(அல்லது) கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஆண்டர்சன் சாலை வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து வலது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, ஒட்டேரி சந்திப்பு, குக்ஸ் சாலை மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

(அல்லது) கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஆண்டர்சன் வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, போர்சுகீஸ் சாலை, கான்ஸ்டிபள் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை வழியாக செல்லலாம்.

கான்ஸ்டிபள் சாலையில் பில்கிங்டன் சாலை சந்திப்பிலிருந்து ஆண்டர்சன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்ல கூடிய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் பில்கிங்டன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.
கனரக வாகனங்கள் கான்ஸ்டிபள் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கான்ஸ்டிபள் சாலை, போர்சுகீஸ் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.


கொன்னூர் நெடுஞ்சாலையிலிருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் கொன்னூர் நெடுஞ்சாலையில் நேராக சென்று இடது புறம் திரும்பி டேங்க் பண்ட் சாலை வழியாக செல்லலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Ayanavaram andersen road block


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->