பாஜகவின் முக்கிய புள்ளி மது அருந்தும் புகைப்படம்! அலுவலகத்தின் வெளியே அடி-உதை! 3 பேர் தலைமறைவு! - Seithipunal
Seithipunal


சென்னை கிழக்கு மாவட்டத்தின் பாஜக தகவல் தொழில்நுட்ப செயலாளராக இருந்து வருபவர் ராஜேஷ். சம்பவம் நடந்த அன்று ராஜேஷ் நங்கநல்லூரில் உள்ள அலுவலகத்தில் இருந்துள்ளார்.

அப்போது, அந்த அலுவலகத்திற்கு வந்த சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் சுப்பையா மற்றும் அவரின் உறவினர் முத்தரசன், நங்கநல்லூர் பாஜக தலைவர் ஜெகவர் ஆம்ஸ்ட்ராங் ஆகிய மூவரும் சேர்ந்து, ராஜேஷ்-யை வெளியே தர தர என்று இழுத்து வந்து அடித்து உதைத்து உள்ளனர்.

நங்கநல்லூர் அலுவலகம் எதிரியே, சாலை ஓரமாக பாஜக நிர்வாகி ஒருவரை, பாஜக நிர்வாகிகளே அடித்து உதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், தாக்குதல் சம்பவம் பின்னணி குறித்து விசாரணை நடத்தியதில், பாஜக நிர்வாகி சுப்பையா மது அருந்தக்கூடிய புகைப்படங்களை யூடியூப் வெளியானதும், அந்த புகைப்படங்களை ராஜேஷ் தான் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலுக்கு கொடுத்ததாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ராஜேஷ் மீது சுப்பையா மற்றும் அவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தி உள்ளதாக போலீசரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள அவர்களை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai BJI IT Wing Rajesh Arracked Nanganallur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->