சென்னையில் பாஜக கமலாலயத்தில் பெரும் பரபரப்பு! பதறவைத்த மர்ம நபர்! - Seithipunal
Seithipunal


சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெடிகுண்டு மிரட்டலை எடுத்து கமலாலயத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளதாகவும், இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து மாம்பலம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல் போன் நம்பரை ஆய்வு செய்ததில், அந்த நம்பர் வேலூர் மாவட்டத்தில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் எடுத்த நபரை கைது செய்ய தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். 

முன்னதாக நேற்று சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 

பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனைகள் இது போலி மிரட்டல் என்பது தெரிய வரவே, இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

இதேபோல் நேற்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வருமானவரித்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக வந்துள்ளது. 

இதனை அடுத்து சுமார் ஒரு மணி நேரம் வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டதில், இந்த வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது.

கடந்த சில நாட்களாவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai BJP Kamalalayam Bomb threat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->