தனியார் மயமாகும் சென்னையின் இரண்டு புதிய பேருந்து நிலையங்கள்.! - Seithipunal
Seithipunal


வண்டலூர் மற்றும் திருமழிசை புதிய பேருந்து நிலைய நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் பொருட்டு, வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அருகே 300 கோடி ரூபாயில் மற்றொரு புதிய பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது. இவற்றில், வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் 60 சதவீதம் அளவிற்கு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டிற்குள் முழு அளவிலான பணிகளை முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. 

இந்த இரண்டு புதிய பேருந்து நிலையங்களையும் பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியுள்ளது.

இது தொடர்பான வழிமுறைகளை வகுப்பது தொடர்பாக கலந்தாலோசிக்க, சர்வதேச ரியல் எஸ்டேட் சந்தை நிலவர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள ஜே.எல்.எல்., நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

விமான நிலையங்களின் பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்தும், விமான நிலைய தனியார் மயமாக்கலை கண்டித்தும் அரசியல் செய்து வரும் தி.மு.க., தற்போது ஆட்சியில் இருக்கும் போது, ஏழை எளிய மக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலையங்களை தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai bus stand taken private


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->