பிளாஸ்டிக் இல்லா பள்ளி, கல்லூரிக்கு ரூ.10 லட்சம் பரிசு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழ்நாடு அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு தடை விதித்தது. இதனை பிளாஸ்டிக் உற்பத்தி ஆலை நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருந்து வரும் நிலையில் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தற்போதைய திமுக அரசு மஞ்சப்பை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில் கல்வி நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளி கல்லூரிகளில் காசிம் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்தினால் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதோடு ரூ. 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிளாஸ்டிக் இல்லாத சிறந்த கல்வி நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றங்கள் மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்க தலா 3 பள்ளி கல்லூரிகளுக்கு விருது வழங்கப்படும் முதல் பரிசு 10 லட்சம் இரண்டாம் பரிசு ரூ.5 லட்சம் மூன்றாம் பரிசு 3 லட்சம் வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்களை www.chennai.nic.in என்ற‌ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai collector announced Rs10 lakhs with manjapai award no plastic


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->