6000 ரவுடிகளுக்கு ஆப்பு ரெடி.. இனி தப்பிக்கவே முடியாது - அதிரடி காட்டும் சென்னை ஆணையர்.!  - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் படுகொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருணை, சென்னை பெருநகர காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் மற்றும் உளவுத்துறை இணை ஆணையர் தர்மராஜ், இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்களுடன் ரவுடிகளை ஒடுக்குவது குறித்து ஆலோசனை நடத்தினார். 

அப்போது,’சென்னை பெருநகர் முழுவதும் குற்றங்களில் ஈடுபட்ட 6 ஆயிரம் குற்றவாளிகள் குறித்த முழு விபரங்களை 2 நாட்களுக்குள் அறிக்கையாக அளிக்க வேண்டும். கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளில் 700 பேர் தற்போது சிறையில் உள்ளனர். அவர்களின் முழு குற்ற விபரங்களையும் அளிக்க வேண்டும்.

ரவுடிகள், வழிப்பறி கொள்ளையர்கள், திருடர்கள் என 6 ஆயிரம் குற்றவாளிகளின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று, அவர்கள் தற்போது அங்கு வசிக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி அவர்கள் வசிக்க வில்லை என்றால் எங்கு இருக்கிறார்கள்? என்ற விவரங்களை சேகரிக்க வேண்டும். 

ஒரு காவல் நிலைய எல்லையில் கொலை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் நடப்பதற்கு முன் சம்பந்தபட்ட குற்றவாளிகளை காவல் ஆய்வாளர்கள் கைது செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்படுவார் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளுடன் தொடர்பில் உள்ள காவல் ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை தொடர்பில் உள்ளவர்கள் குறித்து உளவுத்துறை தகவல் அளிக்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai commissioner arun order found 6000 rowdys


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->