அட பாவமே! இவருக்கே டெங்கு காய்ச்சலா! அப்போ மக்களின் நிலை?
Chennai Corp Commissioner Radhakrishnan has dengue fever
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து காணப்படும் நிலையில் கடந்த மாதம் சென்னை மதுரவாயிலை சேர்ந்த 4 வயது சிறுவன் ரக்சன், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அபிநிதி என்ற சிறுமியும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தனர். டெங்கு காய்ச்சல் தமிழக முழுவதும் தீவிரமடைந்துள்ளதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
இருப்பினும் தமிழக முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 30 பேர் வரை பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் இன்று 1000க்கும் மேற்பட்ட இடங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
சென்னையில் 15 மண்டலங்களின் 3 இடங்கள் வீதம் 45 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் முன்னாள் சுகாதாரத் துறை செயலாளரும் தற்போதைய சென்னை மாநகராட்சியின் ஆணையருமான ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையின் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனுக்கே டெங்கு காய்ச்சல் என்றால் சாதாரண பொது மக்களின் கதி என்ன? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
English Summary
Chennai Corp Commissioner Radhakrishnan has dengue fever