பரபரப்பு புகார் அளித்த மாணவி பின்வாங்கியது ஏன்?.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


தன்னார்வலராக பணியாற்றி வந்த கல்லூரி மாணவியிடம் காதல் வார்த்தைகள் கூறி, ஆபாசமாக பேசிய காமுகன் கமலக்கண்ணன் தொடர்பான பரபரப்பு ஆடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தொடர்பாக மாணவியின் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

இந்த விஷயத்தை அறிந்துகொண்ட கமலக்கண்ணன் தலைமறைவாகினான். மேலும், சென்னை மாநகராட்சி ஆணையரும் விசாரணை மேற்கொண்டு, கமலக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பெண்மணி கையெழுத்திட்ட கடித்ததுடன் வழக்கறிஞர்கள் சிலர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான காவல் கண்காணிப்பாளரை  சந்தித்து பாலியல் புகாரை திரும்பப் பெறுவதாக கூறினார். மேலும், அந்த கடிதத்தில் செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தனது அண்ணன் போன்றவர் என்றும், அவர் தன்னிடம் தவறாக பேசவில்லை. 

எதிர்கால திருமண வாழ்க்கை குறித்தும், படிப்புக்கான ஆலோசனைகளை மட்டுமே அவர் வழங்கி இருந்தார் என்றும், தனது குரல் பதிவை திருடி அதை வெளியிட்டு விட்டார்கள் என்றும் கூறியுள்ளார். இது மட்டுமல்லாது கமல கண்ணன் மீது எழுத்து மூலமாகவும், வாய் மூலமாகவோ எந்தவிதமான புகாரும் கொடுக்கவில்லை என்றும், மகளிர் காவல் நிலைய அதிகாரி தான் தாமாக முன்வந்து செல்போன் பதிவு குறித்து விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளதாகவும், எனது அண்ணன் மிகவும் நல்லவர் என்றும் அந்த மனுவில் கூறியுள்ளதாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். 

இதனை ஏற்க மறுத்த காவல்துறையினர் எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் சென்று பார்த்து கொள்ளுங்கள் என்று கூறி எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த மாணவி கமலகண்ணன் தரப்பு குழுவால் மிரட்டப்பட்டுள்ளது இதில் இருந்து அம்பலமாகியுள்ளது. மேலும், மாணவிக்கு தேவையான பாதுகாப்பை காவல் துறை அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றும், இதற்கிடையில் மாணவிக்கு அல்லது அவரது குடும்பத்தாருக்கு ஏதேனும் நேர்ந்தால் அது கமலக்கண்ணனால் மட்டுமே இருக்கும் என்றும், கமலக்கண்ணனை காவல் அதிகாரிகள் விரைவில் கண்டறிய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Corp govt Employee Kamal Kannan sexual torture college girl case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->