சென்னை வாசிகளே.. இந்த உரிமம் இல்லையா.. உடனே  பதிவு செய்யுங்கள்..! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பொதுமக்களிடையே செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. பொதுவாக, தங்களது பாதுகாப்பிற்காகவும், மன மகிழ்ச்சிக்காவும் நாய், பூனை, பறவை உள்ளிட்ட இனங்களை அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை மாநகராட்சி விதிகளின் படி செல்லப் பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்கள் பிராணிகளை வளர்ப்பதற்காக உரிமம் பெற்றிருக்க வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட மையங்களில் செல்லப் பிராணிகளுக்கான உரிமம் ரூ.50, கட்டணத்தில் வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. 

மேலும், செல்லப் பிராணிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் திரு.வி.க.நகர், நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய மையங்களில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

"வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை" என்ற இலக்கினை அடையும் வகையில் இந்த மையங்களில் அனைத்து செல்லப் பிராணிகளுக்கும் வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி முற்றிலும் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த கால்நடை மருத்துவ சிகிச்சை மையங்கள் அரசு விடுமுறை நாட்களைத் தவிர, தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்படுகிறது. அதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai corperation order for pet animals insuranse


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->