சென்னை மாநகராட்சி : 30 ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை.! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சி : 30 ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை.!

சென்னை மாநகராட்சி சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடபட்டுள்ளது. அதில் "சென்னை மாநகராட்சியில் சட்டப்படி அரையாண்டின் முதல் பதினைந்து  நாட்களுக்குள் சொத்துவரி செலுத்தப்பட வேண்டும். அப்படி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும். 

அந்த வகையில், இந்த மாதம் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரைசுமார்  4 லட்சத்து 89 ஆயிரத்து 794 சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற்றுள்ளனர். அதேசமயம் ரூ.290.62 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்ட திருத்தத்தின்படி நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை இந்த மாதம் 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத் தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். 

சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் அமைந்துள்ள அரசு இ-சேவை மையங்கள் போன்றவற்றின் மூலம் செலுத்தலாம். அதுமட்டுமல்லாமல், நம்ம சென்னை மற்றும் பேடிஎம் செயலி, சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமும் செலுத்தலாம். 

ஆகவே, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்தி தங்களுக்கான ஊக்க தொகையை பெற்றுக்கொள்ளவும், சென்னை மாநகராட்சிக்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai corporation announce incentive if property tax paid by 30 th


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->