அடேங்கப்பா.. ரூ.1800 கோடி சொத்து வரி வசூல் - சென்னை மாநகராட்சி சாதனை.!!
Chennai corporation collect Rs1800crs property tax
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் சொத்து வரி உயர்த்தப்படாது என திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அதற்கு மாறாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏர்டெல் சொத்து வரிகள் உயர்த்தப்பட்டன.
அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி 150 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ.1573 கோடி ரூபாய் சொத்துவரி மூலம் வசூல் செய்து புதிய சாதனை படைக்கப்பட்டது.
இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் சென்னை மாநகராட்சி ரூ.1800 கோடி சொத்து வழியாக வசூல் செய்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 227 கோடி ரூபாய் அதிகமாகும்.
English Summary
Chennai corporation collect Rs1800crs property tax