ஆஹாஆஹா!!!மீண்டும் ஆண் குழந்தையை பெற்றெடுத்த எமி ஜாக்சன்...!!!
Amy Jackson gave birth to a baby boy again
பிரபல நடிகை எமிஜாக்சன், தமிழில் 'மதராச பட்டினம்', 'ஐ' உள்பட தெலுங்கு, இந்தி, ஆங்கில படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறி இருப்பவர் . இவர் இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை காதலித்து வந்தார்.

அவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் ஆகாமலேயே இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இவர்கள் குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என பெயரிட்டனர்.இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
தொடர்ந்து எமிஜாக்சன் பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வெஸ்ட்விக்கை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மீண்டும் எமிஜாக்சன் கர்ப்பம் அடைந்தார். கர்ப்ப கால புகைப்படங்களை அடிக்கடி எமியும், எட்வெஸ்ட்விக்கும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் எமிஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக எட்வெஸ்ட்விக் சமூக வலைதளம் வாயிலாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆஸ்கர் அலெக்சாண்டர் வெஸ்ட்விக் உன்னை இந்த உலகத்துக்கு வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
மகன் பிறந்ததை பெயருடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள எமிஜாக்சன்-எட்வெர்ட் வெஸ்ட் விக் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.இது தற்போது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Amy Jackson gave birth to a baby boy again