ஓ!!! பேக் வாக்-ஜாகிங் பயிற்சி செய்த மம்தா பானர்ஜி!!! - வைரல் வீடியோ - Seithipunal
Seithipunal


இங்கிலாந்துக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை பயணமானார்.

மம்தா பானர்ஜி தற்போது லண்டனில் காலையில் தனது பாதுகாலவர்களுடன் பேக் வாக் மற்றும் ஜாகிங் செய்து உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோ சமூக வலைதள இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை பகுதி முதல் ஹைட் பூங்கா வரை அவரின் நடைப்பயிற்சி நீண்டுள்ளது. இந்த குறிப்பிட்ட வீடியோக்களை பகிர்ந்த திரிணாமுல் காங்கிரசின் அதிகாரபூர்வ எக்ஸ் தளம்,"நடைப்பயிற்சி அல்ல, வெறும் வார்ம்-அப் "என்று கேப்ஷன் இட்டுள்ளது.

மேலும் அவர் பின்னோக்கி நடக்கும் பேக் வாக் எனப்படும் பயிற்சி மேற்கொண்ட வீடியோவும் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இதற்கிடையே லண்டன் இந்தியா ஹவுசில் நடந்த தேநீர் விருந்திலும் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.இதைப்பற்றி இந்திய மக்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mamata Banerjee did a back walk jogging exercise Viral Video


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->