சொத்து வரி மற்றும் தொழில் வரியை செலுத்தாமல் ரூ. 230 கோடி நிலுவை.. சென்னை மாநகராட்சி தகவல்.!!
chennai corporation says about property tax
தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசினால் அமைக்கப்பட்ட 15வது நிதி ஆணையத்தின் நிபந்தனையின் பேரில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் பரப்பளவிற்கு தகுந்தவாறு சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது.
பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 600 சதுர அடிக்கு குறைவாக உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25% மட்டுமே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் 1200 சதுர அடி கட்டிடங்களுக்கு 50 சதவீத வரியும், 1201 முதல் 1800 சதுர அடி பரப்பளவில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீத வரியும், 1801-ம் சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு 100 சதவீத வரியும் வரி உயர்வு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2022-23ம் நிதியாண்டில் ரூ. 1500 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது சென்னை மாநகராட்சி. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதத்திற்கான வரியை ஏப்ரல் 15க்குள் செலுத்தினால் 5% வரி சலுகை வழங்கப்படும்.
சொத்து மற்றும் தொழில் வரி கடந்த ஆண்டை விட 35% கூடுதலாக வசூல் செய்யப்படும். சொத்து வரி மற்றும் தொழில் வரியை செலுத்தாமல் ரூ. 230 கோடி நிலுவையில் உள்ளது. பிரபல நட்சத்திர ஓட்டல்கள் அதிகளவு நிலுவை வைத்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
English Summary
chennai corporation says about property tax