மின் கட்டணம் வசூல் செய்ய தடை... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், மூன்றாவது ஊரடங்கு மே மாதம் 17 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டது. இதில் மாநில அரசுகள் தங்களின் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல தளர்வுகள் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

தாழ்வான மின் இணைப்புகளுக்கு வரும் 18 ஆம் தேதி வரை மின்கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான மின் இணைப்புகளுக்கு வரும் 18 ஆம் தேதி வரை மின்கட்டணம் வசூல் செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு சார்பில் பதில் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதனைப்போல மின் கட்டணம் செலுத்தாத நபர்களுக்கு மின் இணைப்பை துண்டிப்பு செய்யவும் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இராஜேந்திரன் என்பவர் தொடுத்த வழக்கின் விசாரணையில், இந்த தீர்ப்பானது சென்னை உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்ட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai court order electricity bill payment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->