கிண்டியில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்! மனு தள்ளுபடி!
chennai doctor attack case issue court judgement
சென்னை கிண்டியில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேசுக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வரும் மருத்துவர் பாலாஜி ஜெகந்நாதன் என்பவரை விக்னேஷ் என்ற இளைஞர் நேற்று மருத்துவமனையிலேயே கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த மருத்துவர், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விக்னேஷ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்க மறுத்து, அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
English Summary
chennai doctor attack case issue court judgement