கட்டண மேல்வரியை குறைத்த சென்னை குடிநீர் வாரியம்!
chennai drinking water charges reduced
சென்னை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வரி மற்றும் கழிவு நீர் அகற்ற வரி போன்ற கட்டணங்களை பொதுமக்கள் காலதாமதமாக செலுத்தினால் மாதத்திற்கு 1.25 சதவீதத்தில் மேல் வரி வசூலிக்கப்பட்டுவந்தது.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஜூலை 1-ந்தேதி முதல் மேல்வரியாக வசூலிக்கப்படும் 1.25 சதவீதத்தை 1 சதவீதமாக குறைக்க சென்னை குடிநீர் வாரியம் தீர்மானித்துள்ளது.
எனவே, பொதுமக்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலத்திற்குள், குடிநீர் வரி மற்றும் கழிவு நீர் அகற்று வரி கட்டணங்களை செலுத்திவிட்டு மேல் வரி செலுத்துவதை தவிக்குமாறு வலியுறுத்துகிறார்கள்.
சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை பொதுமக்கள் இணைய தளம் வழியாக டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும், தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில் காசோலை, வரைவோலையாகவும் பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலங்களில் வரைவோலை, காசோலை மற்றும் பணமாகவும், கட்டணங்களை செலுத்தலாம்.
மேலும், பிற கட்டண முறைகளான கி.யூ.ஆர்.குறியீடு, யூ.பி.ஐ., Pos போன்றவற்றை பயன்படுத்தியும் கட்டணங்களை செலுத்தலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் உரிய காலத்திற்குள் தங்களது வரிகளை செலுத்தி வாரியத்தின் வளச்சியி மேப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
English Summary
chennai drinking water charges reduced