2வது நாளாக‌ முடங்கிய விமான சேவை.. பயணிகள் கடும் அவதி.!! - Seithipunal
Seithipunal


ஐக்கிய அரபு நாடுகளில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கத்தால் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நேற்று மட்டும் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 440 விமானங்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

கனமழை சூறாவளி வெள்ளப்பெருக்கு காரணமாக விமானங்கள் முன்னறிவிப்பு என்று ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இந்த நிலையில் சென்னையில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானங்கள் இரண்டாவது நாளாக இன்றும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து அபுதாபி சார்ஜா குவைத்துக்கு செல்லும் 12 விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் செய்வதறியாதே தவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Dubai flights are cancelled on 2nd day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->