கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. - Seithipunal
Seithipunal


சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ. 487 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட இந்த மாநாட்டுக் கூடம் ரூ.102 கோடியிலும், 10 ஆயிரம் நபர்கள் பார்வையிடும் வசதிகொண்ட கண்காட்சி அரங்கம் ரூ. 172 கோடியிலும், கூட்ட அரங்குகள், அரங்கம் ஆகிய வசதிகள் ரூ.108 கோடியிலும் அமையவுள்ளது.

மேலும், திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், 10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகள்  இங்கு மேற்கொள்ள பட இருக்கிறது.

அரங்கத்திற்கான சாலை வசதி, சுற்றுச்சுவர், நுழைவு வாயில் உள்ளிட்டவைகள் ஆகிய பணிகள் ரூ. 105 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளது.

வருகின்ற 2025 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2026 தொடக்கத்தில் இந்த கட்டுமான பணிகளை முடிக்க பொதுப்பபணித்துறை திட்டமிடப்பட்டுள்ளது குறிபிடித்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai ECR Kalaignar International Hall TNGovt 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->