#சென்னை : 4 கிலோ கஞ்சா., அசால்ட்டாக வந்த வாலிபரை தட்டி தூக்கிய போலீசார்.! - Seithipunal
Seithipunal


சென்னை : அம்பத்தூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகம் உள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில் அம்பத்தூர் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது பொட்டலம் பொட்டலமாக 4 கிலோ கஞ்சாவை எடுத்து வந்துள்ளது தெரிய வந்தது. 

மேற்கொண்டு நடத்திம விசாரணையில் அந்த நபர் செங்கல்பட்டு மாவட்டம் அரசூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகர் என தெரியவந்துள்ளது.

மேலும், அவர் அடையாளம் தெரியாத நபருக்காக ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கஞ்சாவை இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்ததாக ஒப்புக் கொண்டார். 

இவர் மீது ஏற்கனவே மதுராந்தகம் மற்றும் திண்டிவனம் காவல் நிலையத்தில் கஞ்சா கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து காவல்துறையினர் அவரின் இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

இதனை தொடர்ந்து காவல்துறையினர் பிரபாகர் மீது வழக்குப் பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CHENNAI GANJA


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->