தமிழக அரசின் அதிகார அத்துமீறல்! கிண்டி ரேஸ்கோர்ஸ் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் இடத்திற்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் கொடுத்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

160 ஏக்கர் நிலத்திற்கு ₹730.86 கோடி வாடகை பாக்கியை செலுத்தாத விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்த அரசு, தனது கட்டுப்பாட்டில் எடுத்தது.

இதனை எதிர்த்து ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் சார்பில் அவசரமாக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்து, கால அவகாசம் கொடுக்காமல் சீல் வைக்கப்பட்டுள்ளது என வாதம் வைக்கப்பட்டது.

குத்தனை ரத்து குறித்து நோட்டீஸ் அளித்து காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, குத்தகை ரத்து குறித்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதம் வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

வழக்கு விசாரணையின் போது குத்தகை ரத்து செய்ததற்கான நோட்டீஸ் வழங்காமல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சீல் வைக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற நீதிபதிகள் தெரிவித்தனர். 

மேலும் அரசின் இந்த அதிகாரமீறலுக்கு நீதிமன்றம் துணை போகாது என்றும் தமிழக அரசுக்கு தங்களது கண்டனத்தையும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Guindy race course case Government High court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->