கொலை முயற்சி வழக்கில் ஜெய்குமாருக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்!
Chennai HC ADMK Jayakumar
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யும் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
2022ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது, கள்ள ஓட்டுப்பதிவை முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை எதிர்த்து திமுக உறுப்பினர் நரேஷ்குமார் மீது தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் பின்னணியில், ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது வழக்கறிஞரின் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சனிக்கிழமை நீதிபதியின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது, நீதிபதி ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி தொடர்பான குற்றச்சாட்டுகளை கவனித்து, வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தெளிவாகத் தெரிவித்தார்.
English Summary
Chennai HC ADMK Jayakumar